பொருளாதார நெருக்கடி - மன்னாரிலிருந்து கைக்குழந்தையுடன் தமிழகத்திற்கு சென்ற 6 இலங்கையர்கள்

Published By: Digital Desk 4

22 Mar, 2022 | 06:59 PM
image

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் வாழும் மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம்  தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளது. இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதே போல் தற்போது  இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதால்  இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லக் கூடும்  என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என  கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (21) இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்டவர்களும், நான்கு மாத கைக்குழந்தையுடன்  ஆறு பேர் ஒரு கண்ணாடி இழை படகில் தமிழகம் நோக்கி பயணித்த நிலையில்  இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை   1 மணியளவில்  தனுஷ்கோடியை அடுத்துள்ள 4ஆவது  மணல்  திட்டு பகுதியில் சென்று இறங்கியுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான கப்பல் விரைந்தது. 

மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த  6  பேரையும் மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களான தட்டுபாடு அதிகரித்துள்ளதால் இந்த ஆறு இலங்கை தமிழர்களும்  தமிழகத்துக்கு அகதிகளாக சென்ள்ளதாக பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் குறித்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் பொலிஸார் இராமநாதபுரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

2025-11-08 10:33:10
news-image

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில்...

2025-11-08 10:22:56
news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57