உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும்  நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு மற்றும் டிரான் பேரன்சி இன்டர் நெஷனல் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடத்தில் கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன இன்று குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை நீதியான தேர்தலுக்கான சுயாதீன அமைப்பான பெப்ரல் அமைப்பினை மத்திய நிலையத்தில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.