கன்னட நடிகர் யஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் 2 ' படத்தில் இடம்பெற்ற ' தூஃபான்...' என தொடங்கும் பாடல், வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படமான 'கே ஜி எஃப் 2' படத்தில் ‘ராக் ஸ்டார்’ யஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத், பொலிவுட் நடிகை ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.
கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரகாந்தூர் தயாரித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் பாடலாசிரியர் மதுரகவி எழுதி, ' தூஃபான்' என தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானது.
வெளியான குறுகிய தருணங்களில் யூடியூப் இணையதளத்தில், 'மியூசிக்' பிரிவில் முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த பாடலில் 'ராக்ஸ்டார்' யஷ்ஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான குரல்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM