(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பான எந்த விடயமும் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவுமில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நாட்டு மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள், பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது , 'இயலாமையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும்' என்று பல சந்தர்ப்பங்களில் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர். அத்தோடு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று எதிர்தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களிலும் , இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. எவ்வாறிருப்பினும் குறித்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் , அது உண்மைக்கு புறம்பானது என்றும் ஜனாதிபதியின் பேச்சாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டதா என்று நேற்றைய தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்ட போதே அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , ' ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பான எந்த விடயமும் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படவில்லை. அவ்வாறு எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவுமில்லை. அத்தோடு அது தொடர்பில் எனக்கும் எதுவும் தெரியாது.' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM