முன்னதாக அறிவிக்கப்பட்ட மூன்றரை மணித்தியால மின்வெட்டினை ஒன்றரை மணித்தியாலங்களாக குறைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் மாலை வேளையில் அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நீர் மூலம் மின்சாரத்தினை பெறுவதற்கு மேலதிக நீரினை வழங்குவதற்கு மகாவலி அதிகாரச் சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையிலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.