(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு எதிர்வரும் வாரம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். எரிவாயு இறக்குமதிக்கு தேவையான கடன் பத்திரத்தை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிந்து குறுகிய மற்றும் நீண்டகால கடன்திட்டத்தின் கீழ் 50 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப்பெற்றுள்ளது. அந்நிதி ஊடாக எரிபொருளை கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்,மருந்து மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதிகளுக்காக 150 கோடி டொலர் கடனடிப்படையில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எரிவாயு இறக்குமதிக்கு தேவையான டொலரை விநியோகிக்க மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதுடன்,இறக்குமதிக்கான கடன்பத்திரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு எதிர்வரும் வாரம் உறுதியான தீர்வு பெற்றுக்கொள்ளப்படும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM