சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக செயற்பட்ட சமூக செயற்ப்பாட்டாளர் மீது இராணுவ சோதனை சாவடி அருகில் தாக்குதல்.
கிளிநொச்சி தர்மபுரம் உழவனூர் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக செயற்பட்டுவந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் அரவது உறவினர் மீது கல்லாறு சுண்டிக்குளம் இராணுவ சோதனைச் சாவடி அருகில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் போது அவரது முச்சக்கர வண்டி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதோடு, அவரும் காயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தர்மபுபுரம் உழவனூர், கல்லாறு பகுதிகளில் தொடர்ச்சியாக கட்டுபாடின்றி சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
எனவே இதற்கு எதிராக தாக்குதலுக்குள்ளான சமூக செயற்பாட்டாளர் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததுடன், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பல இடங்களில் முறையிட்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சமூக செயற்ப்பாட்டாளர் மீது கடந்த சனிக்கிழமை மதியம் ஏழு பேர் கொண்ட குழுவினர் சுண்டிக்குளம் கல்லாறு வீதியில் இராணுவச் சோதனை சாவடிக்கருகில் வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு, அவர் பயணித்த அவரது முச்சக்கர வண்டியும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
இதன் போது காயமடைந்த அவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனவே இது தொடர்பில் தர்மபுரம் பொலீஸ் நிலையத்தில் தாக்குதல் ஈடுப்பட்டவர்கள் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டு முறையிட்டும் பொலீஸார் எவரையும் கைது செய்யவில்லை.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் பொது இடங்களில் பகிரங்கமாக நடமாடி திரிகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஒரு சிலர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது சமூக விரோத செயற்பாடுகளை ஊக்குவிப்பதாக அமைவதற்கு வழிவகுக்கும் என்பதோடு, சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போரையும் சமூகத்திலிருந்து காணாமல் ஆக்கிவிடும் என பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM