தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.   

வடக்கு மாணத்தைச் சேர்ந்த 186 தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான  நியமனத்தை கோரியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.