மேற்கிந்தியத் தீவுகளை 13 ஆண்டுகளுக்கு பின் வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர் அணி

By T Yuwaraj

21 Mar, 2022 | 10:25 PM
image

(என்.வீ.ஏ.)

ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமையன்று (21) மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்களால் வீழ்த்திய பாகிஸ்தான், 2009க்குப் பின்னர் முதல் தடவையாக மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது.

Story Image

13 வருடங்களுக்கு முன்னர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மகளிர் உலகக் கிண்ண போட்டியிலேயே பாகிஸ்தான் கடைசியாக  வெற்றிபெற்றிருந்தது.

இந்த வெற்றி மூலம் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் எதிர்நோக்கி வந்த தோல்விகள் முடிவுக்குவந்தது.

மழையினால் நீண்ட நேரம் தாமதிக்கப்பட்டு 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப் போட்டியில்  நிடா டாரின் அதிசிறந்த பந்துவீச்சு உதவியுடன்   மேற்கிந்தியத் தீவுகளை 89 ஓட்டங்களுக்கு  பாகிஸ்தான்  கட்டுப்படுத்தியது.

நிடா டார் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

ஐந்து மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.

டியோண்ட்ரா டொட்டின் (27), அணித் தலைவி ஸ்டெபானி டெய்லர் (18), அஃபி ஃப்ளெச்சர் (12 ஆ.இ.) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 18.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 90 ஓட்டங்களைப்    பெற்று வெற்றியீட்டியது.

பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த போட்டியில் சதம் குவித்த சித்ரா ஆமின் இந்தப் போட்டியில் 8 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.

எனினும் இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய முனீபா அலி மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 37 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானை பலப்படுத்தினார்.

அணித் தலைவி பிஸ்மா மாறூப் 20 ஓட்டங்களுடனும் ஒமய்மா சொஹெய்ல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள்  6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 3ஆம் இடத்தில் இருக்கின்றது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும். தோல்வி அடைந்தால், இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றின் போட்டி முடிவுகளிலேயே அதன் அரை இறுதி  போட்டிக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருடத்தின் ஐசிசி வளர்ந்துவரும் அதிசிறந்த வீரர்...

2023-01-26 22:07:16
news-image

2022ஆம் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி கிரிக்கெட்...

2023-01-26 22:08:08
news-image

பாபர் அஸாமுக்கு வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 17:32:25
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர்...

2023-01-26 15:37:19
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் ரஷ்யர்கள் பங்குபற்றலாம்...

2023-01-26 15:41:21
news-image

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்...

2023-01-26 14:36:35
news-image

தேசிய வலைப்பந்தாட்ட தலைமை பயிற்றுநராக மீண்டும்...

2023-01-26 10:02:49
news-image

சூரியகுமார் யாதவ் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி...

2023-01-26 10:01:06
news-image

பீபா விதித்த தடையை நீக்க முழு...

2023-01-25 19:38:35
news-image

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்...

2023-01-25 19:28:10
news-image

தென்னாபிரிக்காவுடனான பரபரப்பான போட்டியில் 2 ஓட்டங்களால்...

2023-01-25 11:00:24
news-image

நியூஸிலாந்தை 3ஆவது போட்டியிலும் வீழ்த்திய இந்தியா...

2023-01-25 07:54:07