விலை அதிகரித்தாலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு

By T. Saranya

21 Mar, 2022 | 09:24 PM
image

(ஆர்.யசி)

எரிவாயு, மண்ணெண்ணை, எரிபொருள், பால்மா உள்ளிட்ட பொருட்களுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ள போதிலும் நாட்டில் சகல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலையொன்றே காணப்படுகின்றது. 

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை அடுத்து பொதுமக்கள் அதிகாலை மூன்று மணியில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருந்தும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் வரிசையில் நிற்கும் மக்கள் பொறுமையிழந்து ஆவேசப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நாட்டின் டொலர் தட்டுப்பாடு மற்றும் வெளிநாட்டு கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாக அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற நிலையில் தற்போது பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. 

பால்மா, மருந்துகள், எரிவாயு, மண்ணெண்ணெய், விறகு போன்றவற்றை மக்கள் பெற்றுக்கொள்ள அதிக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எரிவாயு விலை அதிகரிப்பை அடுத்து ஹோட்டல்களில் உணவுகளின் விலையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தேநீர், பாண், பரோட்டா, கொத்துரொட்டி, பகல் உணவு பொதிகள் உள்ளிட்ட சகலதினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரித்த போதிலும் மருந்துகளையும், பால்மா உள்ளிட்ட பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாதுள்ளதாகவும், தற்போது வரையில் நாட்டில் 30 தொடக்கம் 40 வீதமான அளவிலேயே பொருட்கள் சந்தையில் காணப்படுவதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள அதிகாலை மூன்று மணியில் இருந்து மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ளதுடன், நீண்டநேர காத்திருப்பின் பின்னரும் தமக்கான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் பொறுமையிழந்து ஊழியர்களுடன் முரண்படும் நிலைமை நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளன.

நேற்றும் கொழும்பில் ஒரு சில பகுதிகளில் இவ்வாறு மக்கள் ஆவேசப்பட்டு மோதலில் ஈடுபட்டதுடன் பொலிஸார் சம்பவ பகுதிகளுக்கு வந்தும் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மக்களின் கொந்தளிப்பு நிலைமையே காணப்படுகிறது. 

காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல் பகுதிகளில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02