நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் பலி; : இருவர் காயம்

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 02:27 PM
image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: வாகன விபத்துக்கள் | Virakesari.lk

மாவனெல்ல

மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாஸ்வத்த-வெலிகல்ல வீதியில் மாவனெல்லை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் உள்ளிட்ட இருவரும் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 23 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனம் விபத்துக்கு காரணம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முலாய்மாவடி பிரதான வீதியில் மாவடி நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய யாழ். காரைநகர் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் காயமடைந்த மற்றைய நபர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அஹங்கம

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - மாத்தறை பிரதான வீதியில் மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் அஹங்கம நகர பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய பெண்ணொருவராவார். விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொல்கஹவெல

பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில்  பொல்கஹவெலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்று கார் மற்றும் பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் மற்றும் பாதசாரி ஒருவரும் சிகிச்சைக்காக பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடைய ஹெலமட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.  பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பில் பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள் - கட்சி...

2026-01-25 17:00:25
news-image

மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு...

2026-01-25 16:59:19
news-image

ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களாக வெகுஜன...

2026-01-25 16:58:45
news-image

விமான நிலையத்தில் குஷ், ஹஷிஷ் போதைப்பொருள்...

2026-01-25 16:57:41
news-image

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க்...

2026-01-25 16:56:25
news-image

அரசியல் தலைவர்கள் தூக்கிபோடு எழும்பு துண்டுகளுக்கு...

2026-01-25 16:56:07
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல்: 06...

2026-01-25 16:55:43
news-image

இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்தல்...

2026-01-25 16:53:18
news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

2026-01-25 16:52:56
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57