உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்கு சம்பியின்ஷிப் போட்டி - இரு புதிய உலக சாதனைகள்

Published By: Digital Desk 4

21 Mar, 2022 | 02:08 PM
image

(என்.வீ.ஏ.)

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் வார இறுதியில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்கு சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெனிசுவேலா வீராங்கனை யூலிமார் ரோஜாஸும் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சுவீடன் வீரர் ஆர்மண்ட் கஸ்டவ் 'மொண்டோ' டுப்லான்டிஸும் புதிய உலக சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.74 மீற்றர் தூரம் பாய்ந்ததன் மூலமே யூலிமார் ரோஜாஸ் புதிய உலக சாதனையை படைத்தார்.

இதன் மூலம் உள்ளக அரங்க முப்பாய்ச்சலில் 3 தடவைகள் வெற்றிபெற்ற முதலாவது மெய்வல்லுநர் என்ற பெருமையை 26 வயதான ரோஜாஸ் பெற்றுக்கொண்டார்.

அப் போட்டியில் ரோஜஸின் 3 முயற்சிகள் 15 மிற்றர் தூரத்தைவிட அதிகமாக இருந்தது. அவரது 2ஆவது மற்றும் 4ஆவது முயற்சிகள்   (15.41 மீற்றர்) தகுதிநீக்கம் செய்யப்பட்டன. 5ஆவது முயற்சியில் 15.36 மிற்றர் தூரம் பாய்ந்தார். ஆனால் அவரது 6ஆவதும் கடைசியுமான தத்தி மிதித்து பாயும் முயற்சி மிகவும் நேர்த்தியாக அமைந்ததுடன் அவர் பாய்ந்த 15.74 மீற்றர் தூரமானது உள்ளக மற்றும் வெளியரங்க போட்டிகளில் அதிகூடிய  முப்பாய்ச்சல்  தூரமாக அமைந்தது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் அவர் நிலைநாட்டிய 15.67 மீற்றர் உலக சாதனையைவிட பெல்கிரேடில் அவர் பாய்ந்த 15.74 மீற்றர் தூரம் கூடுதலாக இருந்தது.

மட்றிட் 2020இல்  ரோஜாஸ் பதிவு செய்த 15.43 மீற்றர் தூரமே முன்னைய உள்ளக அரங்கு உலக சாதனையாக இருந்தது.

பெல்கிரேடில் அவர் வென்றெடுத்த தங்கப் பதக்கம் உலக அரங்கில் அவருக்கு கிடைத்த 6ஆவது தொடர்ச்சியான தங்கப் பதக்கம் என்பது மற்றொரு விசேட அம்சமாகும்.

2016 மற்றும் 2018 உள்ளக அரங்கு   போட்டிகளிலும் 2017 மற்றும் 2019 வெளியரங்கு   போட்டிகளிலும் கடந்த வருடம் நடைபெற்ற டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியிலும் ரோஜாஸ் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

டுப்லான்டிஸ் உலக சாதனை

ரோஜாஸின் உலக சாதனையைத் தொடர்ந்து ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் மொண்டோ டுப்லான்டிஸ் 6.19 மீற்றர் உயரம் பாய்ந்து மற்றொரு உள்ளக அரங்கு உலக சாதனையை நிலைநாட்டினார்.

மார்ச் 7ஆம் திகதி இதே அரங்கில் 6.19 மீற்றர் உயரம் பாய்ந்து ஏற்படுத்திய உலக சாதனையை இப்போது டுப்லான்டிஸ் புதுப்பித்துள்ளார்.

தனது மூன்றாவதும் கடைசியுமான முயற்சியிலேயே டுப்லான்டிஸ் 6.20 மீற்றர் உயரம் பாய்ந்து தனது சொந்த உலக  சாதனையை    டுப்லான்டிஸ் புதுப்பித்தார்.

இப் போட்டியில் 6.05 மீற்றர் உயரத்தைப் பாய்ந்ததன் மூலம் தங்கப் பதக்கத்தை டுப்லான்டிஸ் உறுதிசெய்துகொண்டிருந்தார்.

ஆனால், 6.20 மீற்றர் உயரத்தைப் பாய்வதற்கு அவர் எடுத்த முதலிரண்டு முயற்சிகளும் பலனளிக்கவில்லை. எனினும் கடைசி முயற்சியில் 6.20 மீற்றர் உயரத்தைப் பாய்ந்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.

இதன் மூலம் நான்கு தடவைகள் உலக சாதனையை டுப்லான்டிஸ் புதுப்பித்துள்ளார்.

டோருன் நகரில் 2020 பெப்ரவரியில்  6.17 மீற்றர் உயரத்தையும் ஒரு வாரம் கழித்து க்ளாஸ்கோவில் 6.18 மீற்றர் உயரத்தையும் பெல்கிரேடில் 6.19 மீற்றரையும் இதே அரங்கில் தற்போது 6.20 மீற்றர் உயரத்தையும் தாவி 4 தடவைகள் தனது சொந்த உலக சாதனைகளை டுப்லான்டிஸ் புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08
news-image

அணிக்கு 6 பேர் கொண்ட “...

2025-03-21 14:47:13
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக...

2025-03-21 11:32:11