மருந்து பொருட்களின் விலையை மருந்தக உரிமையாளர்களே தீர்மானிக்கின்றனர் - ராஜித சேனாரத்ன

Published By: Digital Desk 3

21 Mar, 2022 | 01:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கான விலைக்கட்டுப்பாட்டினை அரசாங்கம் கொள்கை அடிப்படையில் மாத்திரம் பேணுகிறது. மருந்து பொருட்களின் விலையை மருந்தக உரிமையாளர்கள் தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

250 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நுகர்வோர் அதிகார சபை,நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவை பெயரளவில் மாத்திரமே செயற்படுகிறது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் அரச நிறுவனங்கள் அரசியல் அழுத்தங்களினால் அமைதி காக்கின்றன.

நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் அரச நிறுவனங்களுக்கு சிவில் துறையில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்காமல் இராணுவத்தினரை நியமிக்கும் போது அவர்கள் மக்களின் பக்கமிருந்து செயற்படமாட்டார்கள் என்பதை தற்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் விலைக்கட்டுப்பாட்டினை அரசாங்கம் கொள்கை அடிப்படையில் மாத்திரமே பேணுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை வர்த்தகர்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையினை மருந்தக உரிமையாளர்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைபட்டியலை அனைத்து மருந்தகங்களிலும் காட்சிப்படுத்தியது.

தற்போது அரச மருந்தக கூட்டுத்தாபனம் மருந்து விலையேற்றம் குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளாமல் அரசியல் செய்கிறது.

ஒரு புறம் மருந்து விலையேற்றம் அதிகரித்துள்ள நிலையில் மறுபுறம் மருத்து பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.நாட்டில் 250 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என அரச மருந்தக கூட்டுத்தாபனம் சுகாதார துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் 55 மருந்து பொருட்கள் தடையில்லாமல் காணப்பட வேண்டும். 3 மருந்து பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகளாகும், 36 மருந்து பொருட்கள் அத்தியாவசியமானது, மிகுதி மருந்து பொருட்கள் சாதாரண மருந்துகளாகும்.

இந்த 55 மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுமாயின் நாட்டின் சுகாதாரத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்து நடுத்தர அதாவது அரச வைத்தியசாலைகளை நம்பியுள்ள பொது மக்கள் பாரிய பாதிப்பினை எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37