மட்டக்களப்பில் கோஷ்டி மோதல் : இருவர் மீது வாள்வெட்டு : இருவர் கைது 

By T Yuwaraj

21 Mar, 2022 | 04:03 PM
image

மட்டக்களப்பு, நாவற்கேணி சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையே  ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டதுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பியவர் கைது | Virakesari.lk

குறித்த பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மரணவீடு ஒன்றில் கலந்துகொண்டவர்கள் அங்கு கடதாசி விளையாட்டில் ஏற்பட்ட  பிரச்சனையின் எதிரொலியாக சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் ஒருமணியளவில்  இரு குழுக்களுக்கிடையே நாவற்கேணி சந்தியில் மோதல் ஏற்பட்டது.

இந்த கோஷ்டி மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கத்திகளுடன் கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இதில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் ஆரம்பம்

2023-01-29 09:29:47
news-image

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார...

2023-01-28 13:02:13
news-image

தேர்தல் இடம்பெறுமா ? இல்லையா ?...

2023-01-28 12:59:57
news-image

வடக்கில் இராணுவ வசமுள்ள 100 ஏக்கர்...

2023-01-28 13:55:10
news-image

கிண்ணியாவில் புதையல் தோண்ட வேனில் பயணித்த...

2023-01-28 12:37:27
news-image

பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல்...

2023-01-28 11:31:02
news-image

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி...

2023-01-28 15:35:58
news-image

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும்...

2023-01-28 15:13:05
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினரையும் பதவி...

2023-01-29 09:26:07
news-image

காணி தகராறு ; இருவர் கொலை

2023-01-28 13:55:45
news-image

மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடளிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2023-01-28 14:01:52
news-image

பான் கீ மூன் இலங்கை வருகிறார்

2023-01-28 13:37:55