பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு காரணம் காங்கிரஸா?

21 Mar, 2022 | 01:32 PM
image

(குடந்தையான்)

அண்மையில் நிறைவடைந்த உத்திரபிரதேசம்,  பஞ்சாப், உத்திரகாண்ட்,  கோவா,  மணிப்பூர் ஆகிய வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்,  பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து,  ஏனைய நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

குறிப்பாக அக்கட்சி உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்றிருக்கும் வெற்றியானது,  இந்தியளவில் அக்கட்சியின் மதிப்பை உயர்த்தி இருக்கிறது. 

மக்கள் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்திருப்பதை பிரதிபலிப்பதாகவும் கொள்ள வேண்டியுள்ளது அத்துடன்,  காங்கிரஸ் கட்சி மீதான அவ நம்பிக்கையை வெளிப்படுத்தியுமுள்ளது.

'காங்கிரஸ் கட்சியிலிருந்து அரசியல் பாடத்தை கற்றுக் கொண்ட தலைவர்கள் தான்,  தற்போது பா.ஜ.க.வில் அதிகமாக இருக்கிறார்கள். 

2014ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தெரிவான மக்கள் பிரதிநிதிகள்ரூபவ் 170க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்கள். 

அதனால் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் தான் காரணம்' என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறிதொரு பிரிவினரோ, பா.ஜ.க. கட்சியை இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். வழி நடத்துவது போல்,  காங்கிரஸ் கட்சியை காந்திய கொள்கையிலும்,  சோசலிச கொள்கையிலும் உறுதிப்பாடும் தெளிவும் கொண்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வழி நடத்தாததே அக்கட்சி பெற்று வரும் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்றும், இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையும்,  தலைவர்களும், அவர்களுக்கு துதிபாடும் கொள்கை இல்லாத தலைவர்களும் தான் காரணம்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

வேறு சிலர், 'பா.ஜ.க. இந்துத்துவாவை தீவிரமான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி,  மக்களை ஒருங்கிணைக்கிறது.

மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கட்சியான காங்கிரஸ்,  அதை தீவிரமாக முன்னெடுக்காமல் மென்மையான இந்துத்துவாவையும், மிதவாதமான மதசார்பின்னையையும் பின்பற்றுவதாலும்,  இவ்விடயங்களில் காங்கிரஸ் கட்சி உறுதியான மற்றும் நிலையானதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதில்லை' என்றும் குற்றம் சுமத்துகிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அடைந்த துயரம் அரசு வைத்தியசாலையில் ஒக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகள்,  கங்கை நதிக்கரையில் வீசப்பட்ட சடலங்கள்,  மிதந்த பிணங்கள்,  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், விவசாய போராட்டங்களால் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும் என்ற அவதானம்,  லக்கிம்பூர் சம்பவம் என்று பல அநீதிகளுக்குப் பிறகும், மக்கள் பா.ஜ.க.வை தெரிவு செய்திருக்கிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-03-20#page-18

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனத்துவ பிரச்சினைகளுக்கு இப்போது தீர்வுகள் தேவை

2026-01-22 09:29:07
news-image

ஆர்க்டிக் மீதான அதிகாரப் போட்டி :...

2026-01-20 14:39:35
news-image

கறுப்பு ஜனவரி'யில் இனியும் இருள் சூழாதிருக்க

2026-01-20 09:11:57
news-image

அநுர குமாரவின் வடக்கு விஜயம் சொல்லும்...

2026-01-20 09:14:02
news-image

இலங்கைக்கு  அமெரிக்கா மேலதிக 25 வீத ...

2026-01-19 11:23:51
news-image

மலையக சமூகத்தை அந்நியப்படுத்தும் சொல்லாடல்களுக்கு முற்றுப்புள்ளி...

2026-01-19 11:01:00
news-image

எதிர்மறையை சாதகமாக்கிய ஜூலி சங்

2026-01-18 05:55:10
news-image

வெறுங்கையுடன் வந்த வாங் யி

2026-01-18 05:47:45
news-image

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

2026-01-18 05:42:29
news-image

அர­சி­யல்­வா­திகள் பொய்­க்கூ­று­வதை சட்­ட­வி­ரோ­த­மாக்கும் முயற்­சியில் வேல்ஸ்

2026-01-18 05:39:45
news-image

சுவிசில் பெருந் துயராக மாறிய புத்தாண்டுக்...

2026-01-18 05:33:08
news-image

ஆய்வுக்கு உட்­ப­டுத்த வேண்­டிய அனர்த்த வரை­ப­டங்கள்

2026-01-18 05:29:35