அழைத்தவுடன் செல்வது பொருத்தமல்ல

21 Mar, 2022 | 01:28 PM
image

(சி.அ.யோதிலிங்கம்)

'பேச்சுவார்த்தை முயற்சிகளும், நிபந்தனையற்ற பேச்சுக்களும் பாதிக்கப்பட்டவர்களை பலவீனமாக்கும் முயற்சியே'

கடந்த மார்ச் 15ஆம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை மார்ச் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

கொழும்பு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், வீணான செலவு, அலைச்சல் என்று சலித்துக்கொண்டு கடும் அதிர்ப்தியுடன் திரும்பியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் நடாத்திய ஆர்ப்பாட்டமே பிற்போடப்பட்டமைக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பது முன்னரே தெரிந்தவொன்று தான், கூட்டமைப்பினர் கூட அதனை சுட்டிக்காட்டியிருந்தனர்.

எது நடந்தாலும் பேச்சுவார்த்தை நடக்குமென அரச தரப்பினால் உத்தரவாதம் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது இறுதியில் அரசு கை விரித்தது.

முன்னரும் சந்திப்புக்கள் ஒத்திவைக்கப்பட்டதை பார்க்கும் போது பேச்சுவார்த்தை தொடர்பான அச்சம் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. 

பெருந்தேசியவாத முகமூடி கிழிந்துவிடும் என்பதற்கப்பால் வேறு காரணங்கள் இருந்திருக்க முடியாது. 

ஒரு வகையில் தற்போது அரசு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அதன் பெரும் தேசியவாத முகத்திற்கும் யதார்த்தம் வேண்டி நிற்கும் முகத்திற்கும் உள்ள இடைவெளிகளே காரணம் எனலாம்.

பேச்சுவார்த்தை தொடர்பாக சம்பந்தனுக்கும் ஒரே குழப்பம் தான், பங்காளிக்கட்சிகள் தற்போதைய சந்தர்ப்பத்தில் நல்லெண்ண சமிக்ஞை கிடைக்காத, நிகழ்ச்சிநிரல் இல்லாத பேச்சவார்த்தையை பெரியளவிற்கு விரும்பியிருக்கவில்லை.

சம்பந்தனின் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சிக்குள்ளும் பெரியளவு விருப்பங்கள் இருக்கவில்லை அரசை பிணையெடுப்பதற்கு தமிழ்த் தரப்பு ஒத்தாசையாக இருக்கக் கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் சொந்த குடும்ப விவகாரம் அல்ல. 

இது வரலாற்று ரீதியாக திட்டமிட்ட ஒடுக்கு முறைகளையும் பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றங்களையும் சந்தித்துவரும் ஒரு தேசிய இனத்தின் இருப்புப் பற்றிய பிரச்சினை. 

இதில் சம்பந்தன் மட்டும் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட முடியாது, தற்போதய கோட்டாபய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. 

அரசியல் ரீதியாக இலங்கைத்தீவை மையமாகக் கொண்ட வல்லரசுகளின் புவிசார் அரசியல் போட்டிக்குள் மாட்டுப்பட்டு விழி பிதுங்கி நிற்கின்றது. 

இதன் விளைவாக உள்நாட்டில் பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்ப்பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. 

இன்னோர் பக்கத்தில் பூகோள அரசியல்காரர்கள் ஜெனிவாவில் இலங்கையின் காதைத்திருகிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மூன்று...

2026-09-15 05:44:35
news-image

24 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு;...

2026-09-15 05:44:49
news-image

தேர்தலை நடத்தச் செய்வதற்காக ஜனநாயகப் போராட்டத்தில்...

2026-09-14 12:55:17
news-image

எதிர்கால சந்ததிக்கு பேராபத்து! அதிகரிக்கும் சிறுவர்...

2026-09-13 16:54:45
news-image

ஆளுநரே, நிதியமைச்சரே - நேர்மையாக வரி...

2026-09-13 16:39:22
news-image

ஜேர்மனியில் வலதுசாரிகளின் எழுச்சி

2026-09-13 16:38:46
news-image

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் போலி...

2026-09-13 15:24:55
news-image

சமவாய்ப்பில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு

2026-09-13 14:40:09
news-image

தலைமைத்துவ போட்டிகளால் தடம்மாறிப்போன ஐ.தே.க.

2026-09-13 12:56:35
news-image

அந்நியப்படும் தமிழ் அரசுக்கட்சி

2026-09-13 12:51:48
news-image

தனிமரமும் தோப்பும்

2026-09-13 12:32:01
news-image

வீரகேசரி நினைவுகள் ; நான் கண்ட...

2026-09-13 11:47:58