(அம்பிகா சற்குணநாதன்)

நவம்பர் 2012 இல் கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜனவரி 13இல், இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட மூன்று குற்றவாளிகளில் ஒருவரான மகசீன் தடுப்புக்காவல் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகரான எமில் ரஞ்சன் லமாஹேவ என்பவர் அமில என அழைக்கப்படும் தேவமுல்லகே மலித் பெரேராவின் கொலைக்கு பொறுப்பானவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அரச அமைப்புகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான அரச அதிகாரிகள் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்வதால் கொல்லப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் நீதியைத் தேடும் போராட்டத்தில் குறித்த தீர்ப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது.

இப்படுகொலைகளை மேற்கொண்டதன் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத் தளங்களில் பொறுப்புக் கூறல் காணப்படுவதில்லை என்பதை இந்த தீர்ப்பு எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. 

அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சட்டரீதியாக வழங்கப்பட்ட பணிப்பாணைகளுக்கு உரிய அதிகாரங்களுக்கு அப்பால் தமது அதிகாரங்களை  துஷ்பிரயோகம் செய்துள்ளமை இங்கு புலப்படுகின்றது.

முன்னரே திட்டமிட்டு நீதிக்கு புறம்பான வகையில் அரச அதிகாரிகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களை கொன்று குவித்த நிலையிலும் பொதுமக்களின் எதிர்ப்புகள் பாரிய அளவில் வெளிப்படவில்லை. 

அத்துடன் அரசாங்கம் இது தொடர்பில் எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல.

அடையாளம் காணப்படாத நபர்கள் இலங்கைக்கு புதிய விடயம் அல்ல

சிவில் உடையணிந்த அல்லது அத்துடன் இராணுவத்தைச் சேர்ந்த நபர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் பின்னர் கொல்லப்பட்டமை தெரிய வந்தது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 

இந்த நபர்களை கடத்திச் சென்றனவர்கள் அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்பதை அனுமானிப்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-03-20#page-22

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/