(எம்.மனோசித்ரா)
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததையடுத்து இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் அதிகரித்துள்ளமையால், இது தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு குழுவொன்றை ஸ்தாபிப்பது பொறுத்தமானது என்று இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) தலைவர் கலாநிதி அஹம்மட் நசார் அல் ரைஸி தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) தலைவர் கலாநிதி அஹம்மட் நசார் அல் ரைஸி ஆகியோருக்கிடையில் அண்மையில் டுபாயில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குற்றங்கள் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை ஒழித்தல் , சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேம்படுத்துதல் என்பன இந்த சந்திப்பின் பிரதான கருப்பொருளாகக் காணப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததையடுத்து இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர இதன் போது சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஒன்றிணைந்த கண்காணிப்பு குழுவொன்றை ஸ்தாபிப்பது பொறுத்தமானது என்று இன்டர்போல் தலைவர் அஹம்மட் நசார் அல் ரைஸி குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் சர்வதேச பொலிஸாரினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும் அமைச்சர் சரத் வீரசேகர இதன் போது நன்றி தெரிவித்தார்.
இலங்கை பொலிஸின் சைபர் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அச்சுறுத்தலைகளை இனங்காண்பதற்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கான தொடர்புகள் குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM