(எம்.எஸ்.தீன்)

இலங்கை முஸ்லிம்களுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் உள்ளிட்ட காணிப் பிரச்சினைகளும் உள்ளன. 

அத்தகைய பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் காலங்களில் மட்டுமே பேசிக் கொள்கின்ற வழக்கமே இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் முடிந்ததும் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து அநியாங்களையும் மௌனமாக அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றவர்ளாகவே முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

முஸ்லிம் கட்சிகளும்,  அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவொரு நிபந்தனைகளும் இல்லாமலே காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு வருகின்றார்கள். 

ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டு இங்கு முஸ்லிம்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாதென்று சர்வதேசத்திற்கு தெரிவித்துக்

கொண்டிருக்கின்ற பிற்போக்குவாதிகளாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்.

கடந்த காலங்களில் தலைவர்களும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சமூகத்தை ஏமாற்றிக் கொண்டார்கள், தற்போது தலைவர்கள் எதிர்க்கட்சியிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடனும் இருக்கின்றார்கள். 

தற்போது தலைவர்கள் இன்றைய ஆட்சி குறித்தும், முஸ்லிம்களின் உரிமை விவகாரங்களில் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் கடும் விமர்சனங்களை முன் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களை புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

நல்லாட்சியில் இரு தரப்பினரும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற அநியாயங்களைப் பற்றி போதிய கவனம் செலுத்தவில்லை.

முஸ்லிம்கள் தமது வாக்குகளினால் இவர்களை வெற்றி பெறச் செய்ததன் நோக்கம் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கோ அல்லது அரசாங்கத்தை புகழ்வதற்கோ அல்ல என்பதனை முஸ்லிம் கட்சிகளும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தும்,  பிரச்சினைகள் குறித்தும், அரசியல் அதிகாரம்,  காணிப் பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே வாக்களித்தார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/