ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் தேசிய வைத்தியசாலையில்

Published By: Digital Desk 3

21 Mar, 2022 | 11:09 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிமன்றை அவமதித்தமைக்காக  4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டனையை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில்  அனுபவித்து வரும், கம்பஹா மாவட்ட  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  நேற்று (20) கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு, அவசியப்படும் மருத்துவ உதவி ஒன்றுக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும்,  அங்கு வைத்து வைத்திய ஆலோசனைக்கு அமைய அவர்  இவ்வாறு அவ்வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்ப்ட்டதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன் ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

முன்னதாக முன்னதாக கடந்த 2021 ஜூன் 19 ஆம் திகதி, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, மருத்துவ பரிசோதனைகளுக்காக  காலை  வேளையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அந்த பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ள  பெறுபேறுகளின் படி முழங்காலில் உள்ள உபாதைக்கு தங்கியிருந்து சிகிச்சைப் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

அதற்கமையவே ரஞ்சன் ராமநாயக்க கடந்த 2021 ஜூன் 28 ஆம் திகதி முதன் முதலாக  காலி, கராபிட்டிய வைத்தியசலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார். அங்கு சிறைக்காவலர்களின் பொறுப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 

பின்னர் அவர் கடந்த 2021 ஜூலை மாதம் 10 ஆம் திகதியளவில் மீள அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பின்னர்  அவர்  2021 நவம்பர் 11 ஆம் திகதி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தர்போது நேற்று (20) மீண்டும் அவர் சிகிச்சைகலுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடந்த 2021 ஜனவரி 12 ஆம் திகதி 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ ஆப்றூ தலைமையிலான நீதியர்சர்களான விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வௌியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்ப்ட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு  கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கும் தீர்ப்பை நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் சிசிர டி ஆப்றூ அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு அமைய  இந்த 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக  அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, ரஞ்சன் ராமநாயக்க, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30
news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53