அரசின் தவறான அணுகுமுறை

21 Mar, 2022 | 10:51 AM
image

(கபில்)

“ஆடு மாடுகளின் விலை கூட ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக விற்கப்படுகின்ற போது, தமிழர் ஒருவரின் மனித உயிர் அதனை விட மதிப்புக் குறைந்ததா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். 

இதேகேள்வியைத் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என எல்லோருமே எழுப்புகிறார்கள்”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம் முன்வைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அது இலங்கைக்கு சவாலானதாக இருக்கும் என்றும், வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கூறியிருக்கிறார்.

அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளுவதற்கும், சர்வதேசத்துடன் சில விடயங்களில் இணங்கிப் போவதாக காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவது அதில் ஒன்று. 

அந்த திருத்தம், சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் அளவுக்கு வலுவானதாக இல்லாவிட்டாலும், அதனை வைத்து கணக்கு காட்ட முற்படுகிறது அரசாங்கம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது இன்னொன்று. அதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படலாம், ஏனைய இடங்களில் அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டு விடும் என்பதற்காக, முதற்கட்டமாக வடக்கு, கிழக்கிலாவது தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றும் அனுமானங்கள் உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பது இன்னொன்று.

அண்மையில் தான் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை விசாரித்து தீர்வு காண 25 குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

அதற்கு அடுத்த வாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  மறுவாழ்வுக்காக, மரணச் சான்றிதழுடன், ஒரே ஒருமுறை வழங்கும், ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவும் காணித்துண்டு ஒன்றும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் இருந்த போதும், அதற்கான பொறிமுறைகளை உருவாக்காமலும், உருவாக்கப்பட்ட பொறிமுறைகளை சரியாக பயன்படுத்தாமலும் இருந்த போதும், பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த விசனத்தை விட, இழப்பீடு தொடர்பாக அரசாங்கம் எடுத்த முடிவினால் அதிக கோபமடைந்திருக்கிறார்கள்.

படையினரிடம் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும்,  தங்களுக்கு நீதியும், உண்மையுமே வேண்டும் என்று கோரி வந்திருகிறார்கள்.

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது, யார் அதற்குப் பொறுப்பானவர்கள் என்பதை வெளிப்படுத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

அதற்காகத் தான் அவர்கள் ஒரு தசாப்தத்துக்கு மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள்.

அவர்களின் போராட்டம், கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-20#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 03:57:33
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56