வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி நகரும் இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட்

20 Mar, 2022 | 04:00 PM
image

(என்.வீ.ஏ,)

இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியற்ற முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

Ben Stokes celebrates with team-mates after dismissing Alzarri Joseph, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 4th day, March 19, 2022

போட்டியின் நான்காம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவின்போது இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் 136 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கின்றது.

Kraigg Brathwaite drives through the covers, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 4th day, March 19, 2022

முதல் நான்கு நாட்களிலும் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட  இப் போட்டியில் இரண்டு அணிகளிலும் தலா இருவர் சதம் குவித்ததுடன் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் ஒவ்வொரு அணியாலும் குவிக்கப்பட்டது.

Matthew Fisher faced some hard yards on debut, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 4th day, March 19, 2022

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் கிட்டத்தட்ட இரண்டு தினங்கள் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பு 507 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

Kraigg Brathwaite and Jermaine Blackwood put on an important partnership, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 3rd day, March 18, 2022

அணித் தலைவர் ஜோ ரூட் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி 316 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்ட்றிகளுடன் 153 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய டான் லோரன்ஸ் 91 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 11 பவுண்ட்றிகளுடன் 120 ஓட்டங்களையும்    பெற்றார்.

Ben Stokes was left frustrated during a dogged fourth-wicket stand, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 3rd day, March 18, 2022

3ஆவது விக்கெட்டில் டான் லோரன்ஸுடன் 164 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜோ ரூட், 4ஆவது விக்கெட்டில் பென் ஸ்டோக்ஸுடன் மேலும் 129 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

Ben Stokes removed the dangerous Nkrumah Bonner for 9, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 3rd day, March 18, 2022

இம் மூவரைவிட மத்திய வரிசையில் பென் போக்ஸ் 33 ஓட்டங்களையும் கிறிஸ் வோக்ஸ் 41 ஓட்டங்ளையும் பெற்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் வீரசாமி பேர்மோல் 126 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெமர் ரோச் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Nkrumah Bonner was not saved by his review, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 3rd day, March 18, 2022

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகளும் கிட்டத்தட்ட 2 நாட்கள் துடுப்பெடுத்தாடி 187.5 ஓவர்களை எதிர்கொண்டு 411 ஓட்டங்களைப் பெற்றது.

இங்கிலாந்து அணித் தலைவருக்கு ஒப்பாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் க்ரெய்க் ப்றத்வெய்ட் 489 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்ட்றிகளுடன் 160 ஓட்டங்களைப் குவித்தார்.

Nkrumah Bonner rolls out the sweep, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 3rd day, March 18, 2022

மத்திய வரிசையில் ஜேர்மெய்ன் ப்ளக்வூட் 11 பவுண்ட்றிகளுடன் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 183 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஷமார் ப்றூக்ஸ் (39), ஜொஷுவா டா சில்வா (33) ஆகிய இருவரும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

Ben Stokes acknowledges his hundred, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 2nd day, March 17, 2022

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜெக் லீச் 118 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சக்கிப் மஹ்மூத் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Joe Root fell to Kemar Roach after lunch, West Indies vs England, 2nd Test, Kensington Oval, Barbados, 2nd day, March 17, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18