ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் 

20 Mar, 2022 | 02:21 PM
image

(என்.வீ.ஏ,)

ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளும் தகுதிகாண் மூலம் தெரிவாகும் ஒரு நாடுமாக 6 நாடுகள் பங்குபற்றும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் இருபது 20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளும் இம்முறை போட்டியில் பங்குபற்றவுள்ளன. ஆறாவது நாட்டைத் தெரிவு செய்யும் தகுதிகாண் சுற்று ஆகஸ்ட் 20ஆம் திகதியிலிருந்து நடைபெறும்.

தகுதிகாண் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய 4 நாடுகள் விளையாடவுள்ளன.

இப் போட்டி தொடர்பான விபரங்களும் திகதிகளும் கொழும்பில் சனிக்கிழமை (19) நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் என்ற இரண்டு வகை கிரிக்கெட் போட்டி மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது.

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் வருடத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் அணிக்கு 50 ஓவர்களாகவும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் வருடத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் அணிக்கு 20 ஓவர்களாகவும் நடத்தப்படும்.

இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கொவிட் - 19 காரணமாக இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு இந்த வருடம் நடத்தப்படவுள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை 15ஆவது தடவையாக நடைபெறவுள்ளது. 1984இல் ஷார்ஜாவில் நடைபெற்ற அங்குரார்ப்பண 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள 14 அத்தியாயங்களில் இந்தியா 7 தடவைகளும் இலங்கை 5 தடவைகளும் பாகிஸ்தான் 2 தடவைகளும் வெற்றிபெற்றுள்ளன.

2016இல் நடத்தப்பட்ட ஒரே ஒரு இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இதில் அடங்குகின்றது. அப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.

இதேவேளை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜே ஷா, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக மேலும் ஒரு வருடம் நீடிப்பார் என வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று சோண்டர்ஸ் - யங் சில்வர்,...

2024-03-03 09:40:12
news-image

107ஆவது பொன் அணிகளின் சமர் :...

2024-03-03 09:38:44
news-image

யூபி வொரியர்ஸிடம் வீழ்ந்த குஜராத் ஜயன்ட்ஸின்...

2024-03-02 14:30:01
news-image

விக்டரி - குறே கழகங்களுக்கு இடையிலான...

2024-03-02 14:01:12
news-image

குசல் பெரேராவுக்குப் பதில் நிரோஷன் திக்வெல்ல

2024-03-01 22:47:20
news-image

ரசிகர்களை கோபமூட்டிய ரொனால்டோவுக்கு ஒரு போட்டித்தடை,...

2024-03-01 17:22:29
news-image

ஆஸி. வீரர் க்றீன் ஆட்டம் இழக்காமல்...

2024-03-01 16:18:07
news-image

டெல்ஹியின் வெற்றியில் கெப், ஜொனாசன், ஷஃபாலி...

2024-03-01 15:05:04
news-image

ஒலிம்பிக் விழாவுக்கான பாதுகாப்பு திட்டங்களைக் கொண்ட...

2024-02-29 20:04:27
news-image

பங்களாதேஷுடனான தொடர்களில் திறமையை வெளிபடுத்த முடியும்...

2024-02-29 14:55:53
news-image

பங்களாதேஷுடனான முதல் இரண்டு ரி20 போட்டிகளில்...

2024-02-28 23:55:46
news-image

பொதுநலவாய செஸ் போட்டியில் இலங்கைக்கு ஒரு...

2024-02-28 21:19:17