லாப் எரிவாயு விலை அதிகரிப்பு 

20 Mar, 2022 | 03:41 PM
image

 லாப் எரிவாயு நிறுவனம் அதன் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 4,199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகவும், 2 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 672 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று எரிவாயுவின் விலைகளையும் அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 2000 ரூபாய் நஷ்டத்திலேயே விற்கப்படுவதாகவும் , டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமையால் தொடர்ந்தும் நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதற்கமைய விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டால் லாஃப் நிறுவனத்திற்கு சமாந்தரமாக லிட்ரோ விலையும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரையறுக்கப்பட்டளவில் கொழும்பில் லிட்ரோ சிலிண்டரை விநியோகிக்கும் சில விநியோகத்தர்கள் 12.5 கிலோ கிராம் சிலிண்டரை 3000 - 3500 ரூபாவிற்கும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரை 800 ரூபாவிற்கும் விற்பனை செய்கின்றனர். 

எவ்வாறிருப்பினும் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2675 ரூபா என்றும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 506 ரூபா என்றும் லிட்ரோ நிறுவனம் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் தூதரக அதிகாரி கொழும்பு விமானநிலையத்தில்...

2022-11-29 05:48:09
news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39