(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மக்களை அன்று பாதுகாத்த நாங்கள் இன்றும் அவர்களை பாதுகாத்து வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்.
இலங்கையில் வாழும் பல்லின சமூகத்தினர் மத்தியில் வரலாற்று காலம் முதல் நல்லுறவு பேணப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நாகதீப விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
விகாரைக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கான வசதிகளை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கவும்,அபிவிருத்தி செய்யவும் அமரபுர பிரிவின் பௌத்த தேரர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
1970ஆம் ஆண்டு முதன் முறையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தேன்.
அப்போதைய காலக்கட்டத்தில் இருந்து கலவர சூழ்நிலையினால் நாகதீபத்திற்கு செல்ல முடியவில்லை அதன் பிறகு தற்போதே வருகை தந்துள்ளேன்.
சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதால் இன்று நாட்டில் எப்பகுதிக்கும் சுதந்திரமாக செல்லும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது.
1983ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற ஒருசில காரணிகளினால் 30வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது.
தெற்கு மக்கள் வடக்கு மாகாணத்திற்கு வர முடியாத நிலைமை அப்போது காணப்பட்டது.வடக்கு மாகாணத்தை மையமாக கொண்டு தோற்றம் பெற்ற யுத்தம் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதிப்பிற்குள்ளாக்கியது.
30வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாகதீப விகாரை துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.
நாகதீப விகாரையினை அபிவிருத்தியை விரிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக 2021ஆம் ஆண்டு அரச பொசன் பண்டிகையை வடக்கு மாகாணத்தில் நடத்த தீர்மானித்திருந்தோம், இருப்பினும் கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் அதனை நடத்த முடியவில்லை.
நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம்,இன்றும் பாதுகாக்கவும்,அபிவிருத்தி பணிகளை விரிவுப்படுத்தவும் ஜனாதிபதியும்,அரசாங்கம் பொறுப்புடன் உள்ளது.
நாகதீப விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வு நிறைவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நயினை நாகபூஷனி அம்மன் கோயிலில் வழிபாட்டில் ஈடுப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM