ஓரிரு தினங்களில் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்யும் நிலைமை மாற்றமடையும் : இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

19 Mar, 2022 | 09:27 PM
image

(எம்.மனோசித்ரா)

மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் குறுகிய காலத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக 25 சதவீத எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இந்த பாதிப்பை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடாக எரிபொருளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் ஓரிரு தினங்களில் வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்யும் நிலைமை மாற்றமடையும் என்றும் சுமித் விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் பவுசர் சங்கத்தினால் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பின் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக பௌர்னமி தினங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட தற்போது எரிபொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் இன்மையின் காரணமாக இன்று முதல் குறுகிய காலத்திற்கு தற்காலிகமாக மூடப்படும். 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். 

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாத்திரமே பெற்றுக் கொள்ளப்படும். 

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் விமானங்களுக்கான எரிபொருள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் கிடைக்கப் பெற்ற டீசல் தொகையை தரையிரக்கும் செயற்பாடுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும். 

இதே போன்று ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேவையானளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமானளவு எரிபொருள் காணப்படுகின்ற போதிலும் , மக்களும் , வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்கின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

உண்மையில் வரிசையில் நின்று இவற்றைப் பெற்றுக் கொள்வது அநாவசியமானதாகும்.

160 நாட்களுக்கான கடன் திட்டத்தின் அடிப்படையில் நீண்ட கால மசகு எண்ணெய் விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

குறித்த ஒப்பந்தத்திற்கமைய மசகு எண்ணெய்யைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் தடையின்றி சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஊடாக 25 சதவீத எரிபொருள் விநியோகம் மாத்திரமே இடம்பெறுகிறதுஇ எனவே எரிபொருள் விநியோகத்தில் ஓரளவு தாக்கம் ஏற்படக் கூடும். 

நாட்டில் அன்றாட தேவைக்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையால் எதிர்வரும் ஓரிரு தினங்களில் வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை மாற்றமடையும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54