எமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை - காணாமல் போனோர் உறவுகளின் சங்கம்

19 Mar, 2022 | 09:31 PM
image

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைச்சரவை  தீர்மானத்தை கண்டித்து வடக்கு கிழக்கின் காணாமல் போனோர் உறவுகளின் சங்கத்தின் தலைவர்கள்  கூட்டாக அறிவிப்பு.

"ஒரு இலட்சம் ரூபாவும்,மரணச் சான்றிதழும்" வழங்கும் திட்டத்திற்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் எமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை  என்பதை மீண்டும் மீண்டும்  கூறி சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கின்றோம் என  வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனோர் உறவுகளின் சங்கத்தின் தலைவர்கள்  கூட்டாக அறிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட தலைவர் -தம்பிராசா செல்வராணி , மட்டக்களப்பு மாவட்ட தலைவி-பொன்னுத்துரை பத்மாவதி , திருகோணமலை மாவட்ட தலைவி- பஸ்ரியன் தேவி , தலைவி முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, மன்னார் மாவட்ட தலைவி -மனுவேல் உதயசந்திரா, யாழ் மாவட்ட தலைவி-இளங்கோதை சிவபாதம்  ,  கிளிநொச்சி மாவட்ட தலைவி-கோகிலவாணி கதிர்காமநாதன் , வவுனியா மாவட்ட தலைவி சறோஜா சண்முகம்  ஆகியோர் இவ்வாறு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது.

இறுதி யுத்தம் 2009 ஆம் ஆண்டு ,மே மாதம் மெளனிக்கப்பட்டதன் பின் இலங்கை இராணுவத்தின்  கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளையும், தாமாகவே எம் கண் முன்னே இலங்கை அரச படைகளிடம்  சரணடைந்த உறவுகளையும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உறவுகளையும் விடுவிக்ககோரி ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் தற்போது 1847 ஆவது நாட்களாக, நூற்றுக்கு மேற்பட்ட சக போராட்ட  உறவுகளை இழந்த நிலையிலும், பல வகையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும், சர்வதேச நீதி கோரிய படி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இனவழிப்பில் ஈடுபட்டவர்களுக்கு, அவர்களின் கொடுஞ் செயல்களுக்கு பரிசாக பன்னாட்டு தூதுவராலயங்களில் ராஜதந்திரிகளாக நியமித்து மகிழும் கலாச்சாரமுள்ள நாடு சிறிலங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு  உயிர்தப்பி வந்தவர்களின் சாட்சியம் காரணமாக "சுனில் ரட்னாயக்கா" என்ற கொலைகாரனுக்கு மரணதண்டனை வழங்கும்  நிலையொன்று  ஏற்பட்டிருந்தது.

ஆனாலும்  ஜனாதிபதிக்கு உள்ள  அதிகாரம் பாவிக்கப்பட்டு  அக் கொலையாளியின் மரணதண்டனை "பொது மன்னிப்பின்" பெயரால் இரத்துச் செய்யப்பட்டு பதவியுயர்வுடன் மீண்டும் சேவையில்  இணைக்கப்பட்டார்.

இவ்வாறு இனப்படுகொலை ஊக்குவிக்கப்படும் படியான சட்ட வலுக்கொண்டசிறிலங்காவின் நீதித்துறை, அதிலே அமைச்சர் பதவி பொறுப்பேற்றதிலிருந்து  திரு அலி சப்ரி அவர்கள் வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடித்து தனது விசுவாசத்தை காட்டும் வகையில் பல  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

எனினும்  அவர் நினைத்தது நடக்காததால் தற்போது "ஒரு இலட்சம் ரூபாவும்,மரணச் சான்றிதழும்" வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதிபெற்றிருக்கின்றார்.

அவரின் இச் செயலை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ் அறிவிப்பானது எமது நீதிக்கான போராட்டத்தினை முற்றிலுமாக உதாசீனப்படுத்துவதுடன், விலைமதிக்க முடியாத எமது உறவுகளின் உயிர்களுக்கு விலைபேச முற்படுவதானது சிங்கள அரசின் உண்மையான முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியுள்ளது.

அத்துடன் அவரின் இத்திட்டத்தினையும் நாம் முற்றுமுழுதாகப் புறக்கணித்து சர்வதேசத்தை நோக்கிய எமது நீதிக்கான போராட்டத்தை முனைப்புடன் தொடர்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குற்றம் இழைத்தவர்கள் பணத்தை கொடுத்து தமது குற்றங்களை மூடி மறைக்க விழைவதினை சர்வதேச சமுகம் மெளனியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதென வேண்டுகோள் விடுக்கின்றோம்.          

மேலும் "எமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை " என்பதை மீண்டும் மீண்டும்  கூறி சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கின்றோம் .

"பதவியாசை, பணத்தாசை,பிடித்து அலைபவர்களிற்கு எமது பாசப்போராட்டம் புரியப்போவதில்லை"  எனவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32