கம்பளை இந்து கல்லூரியில் நேற்றைய தினம் ஆசிரியர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டபோது ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதன்நிமித்தம் பாடசாலை மைதானத்தில் ஆசிரியர்களுக்கு இடையிலான கிரிகட் சுற்று போட்டி ஒன்றும்  நடாத்தபட்டுள்ளது. இதன்போது துடுப்பாட்டம் ஆடி முடித்து விட்டு மீண்டும் ஒரு சுற்றுக்கு ஆயத்தமாகும்போது பாடசாலையின் கணித ஆசிரியர் வேலு பிரபாகரன் (46) மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்து ஸ்தலத்திலேயே மரணமானார். 

இதன்போது மைதானத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த ஆசிரியரை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆசிரியரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளது. இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். இவர் ஏற்கனவே இருதய சந்திரசிகிச்கை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

பா.திருஞானம்