(லியோ நிரோஷ தர்ஷன்)
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான உயர் மட்ட இராஜதந்திர அதிகாரிகள் மூவர் திங்கட்கிழமை (21) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலர் அமண்டா ஜே. டோரி மற்றும் தெற்கு , மத்திய ஆசிய விவகாரங்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஆகியோரே இவ்வாறு விஜயம் செய்யவுள்ளனர்.
அரசியல் விவகாரங்களுக்கான செயலர் விக்டோரியா நுலண்ட் தலைமையிலான உயர் மட்ட குழு பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை சனிக்கிழமை ஆரம்பித்துள்ளது.
இந்தோ - பசிபிக் பங்காளிகளுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க தினைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் தரப்புகள் , சிவில் சமூகம் மற்றும் வர்த்தக சமூகத்தினர் என பல தரப்புகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்தல் என்பன விக்டோரியா நுலண்ட் தலைமையிலான உயர் மட்ட குழுவின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாகும்.
வொஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்டின் இலங்கை விஜயமும் முக்கியமானதொன்றாகியுள்ளது.
32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 - 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.
செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 - 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும் 2010 - 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார்.
2003 - 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார். அத்துடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.
அதேபோன்று இந்த வியத்தில் கலந்துக்கொண்டுள்ள பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலர் அமண்டா ஜே. டோரி, அமெரிக்க பாதுகாப்பு இராஜதந்திர கட்டமைப்புகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான துணை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2018 , 2019 ஆண்டுகளில் அமெரிக்க தேசிய போர் கல்லூரியில் இணை பீடாதிபதியாக கடமையாற்றியுள்ளார். 2012-2017 வரையிலான காலப்பகுதியில் 53 ஆபிரிக்க நாடுகளுக்கான கொள்கை மற்றும் பாதுகாப்பு உறவுகளின் பொறுப்புகளுடன் பாதுகாப்பு செயலாளரின் அலுவலகத்தில் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான துணை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் 2008-2011 வரை பாதுகாப்பு செயலரின் அலுவலகத்தில் மூலோபாயத்திற்கான துணை உதவி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மூலோபாய திட்டங்களை வகுத்தல் மற்றும் நீண்ட கால போக்குகளின் பகுப்பாய்வு மற்றும் எதிர்கால பாதுகாப்பு சூழல் போன்ற பணிகளை முன்னெடுத்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகளை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது. ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM