ஒரு கிலோ பால்மாவின் விலை 1945 ரூபாவாகவும் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 3500 ரூபாவாகவும்  உயர்வடையும் சாத்தியம்

19 Mar, 2022 | 01:48 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் டொலர் நெருக்கடியின் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பால்மா என்பவற்றின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பால்மா விலை

டொலர் நெருக்கடியின் காரணமாக இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு இறக்குமதி நிறுவனங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய தற்போது 1345 ரூபாவாக காணப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 600 ரூபாவாலும் , 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 260 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கப்படுமாயின் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 1945 ரூபாவாகவும் , 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 800 ரூபாவாகவும் உயர்வடையும். 

உலக சந்தையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 2.80 டொலரிலிருந்து 5.30 டொலர் வரை உயர்வடைந்துள்ளதோடு, டொலரின் பெறுமதியும் 202 ரூபாவிலிருந்து 280 ரூபா வரை அதிகரித்துள்ளமையால் தாம் இவ்வாறு விலை அதிகரிப்பிற்கான கோரிக்கையை முன்வைப்பதாக இறக்குமதி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சமையல் எரிவாயு

இதே போன்று டொலர் நெருக்கடியைக் காரணமாகக் காண்பித்து சமையல் எரிவாயுவின் விலைகளையும் அதிகரிப்பதற்கு லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தற்போது 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 2000 ரூபாய் நஷ்டத்திலேயே விற்கப்படுவதாகவும், டொலர் பெறுமதி அதிகரித்துள்ளமையால் தொடர்ந்தும் நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகிக்க முடியாது என்றும் லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதற்கமைய 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 3500 ரூபா வரை உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை 3500 மெட்ரிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டளவில் விநியோகிக்கப்பட்டது. 

திங்கட்கிழமை மேலும் 3500 மெட்ரின் தொன் எரிவாயுவுடன் கப்பலொன்று வருகை தரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கான கடன் கடிதத்தை விடுவிப்பதற்கு மக்கள் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளமையால் , அடுத்த வாரம் முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் வரையறுக்கப்பட்டளவில் கொழும்பில் லிட்ரோ சிலிண்டரை விநியோகிக்கும் சில விநியோகத்தர்கள் 12.5 கிலோ கிராம் சிலிண்டரை 3500 ரூபாவிற்கும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரை 800 ரூபாவிற்கும் விற்பனை செய்கின்றனர்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2675 ரூபா என்றும் , 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 506 ரூபா என்றும் லிட்ரோ நிறுவனம் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09