(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக கோப் குழு வலுசக்தி அமைச்சுக்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
நாட்டு மக்களுக்கு தடையில்லாமல் எரிபொருளை விநியோகித்தல்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை நெறி;ப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை கோப் குழு முன்வைத்துள்ளது.
எண்ணெய் கப்பல்களுக்கு தாமத கட்டணம் செலுத்துவதை இயலுமான அளவு குறைத்துக்கொள்ளுமாறும்,கொள்முதல் செய்யப்படும் எரிபொருள் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப ரீதியில் திட்டங்களை செயற்படுத்தமாறும் கோப் குழு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் வலியுறுத்தியுள்ளது.
முறையான செயலொழுங்கினை பின்பற்றாத வேளையில் பாரிய ஊழல் மோசடி இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகிறது.என கோப் குழு குறித்த பரிந்துரையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 2018ஆம் ஆண்டு எண்ணெய் கப்பலுக்கு மாத்திரம் 1.5 பில்லியன் தாமத கட்டணத்தை செலுத்தியுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு 01 பில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு எண்ணெய் கப்பல்களுக்கு தாமத கட்டணம் செலுத்தல் 3 இலட்சத்தினால் குறைவடைந்துள்ளது என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கோப் குழு கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவசர தேவைக்காக எரிபொருளை சேமித்து வைப்பதற்கும்,அதனை முறையாக விநியோகிக்கவும் தொழில்நுட்ப ரீதியிலான குழு நியமித்து மக்களுக்கு தடையின்றி எரிபொருளை விநியோகிக்கும் திட்டங்களை செயற்படுத்துமாறு கோப் குழு வலுசக்தி அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM