(ஆர்.யசி)
நாடு எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடியில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்தவேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு எம்மால் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்றைய நெருக்கடிக்கு தேசிய அரசாங்கம் தீர்வாக அமையாது எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் நெருக்கடி நிலைமைகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் இப்போதுள்ள நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கே செல்ல வேண்டும். ஜனாதிபதியை மாற்றினால் மட்டுமே அடுத்ததாக அரசாங்கத்தை அமைக்க முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வைத்துக்கொண்டு எமது அரசாங்கத்தை அமைத்துக்கொண்டால் எமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி இடமளிக்க மாட்டார். இதற்கு முன்னரும் அவ்வாறான அனுபவம் எமக்குள்ளது.
எனவே முதலில் தற்போதைய ஜனாதிபதியை மாற்றி எமக்கான ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே எமக்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
ராஜபக்ஷவினர் ஆட்சியில் நாட்டை சரியாக வழிநடத்துவோம் என்றனர். தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படும் என்றனர். ஆனால் இன்று சகல விதத்திலும் நாடு நாசமாகிக்கொண்டுள்ளது. ஒரு சிறிய நாடான எம்மால் விரைவாக அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியும். ஆனாலும் அவ்வாறு பயணிக்க முடியாதுள்ளது என்றால் எமது ஆட்சியாளர்களின் தவறான கொள்கையே அதற்கு காரணமாகும்.
நாட்டிற்கு தேவையானவற்றை நிராகரித்துவிட்டு அவசியம் இல்லாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நெருக்கடிக்கு காரணமாகும். முதலில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும், சகல மக்களுக்கும் அவசியமானவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்க வேண்டும். குடும்ப ஆட்சி, பரம்பரை ஆட்சி ஆகிய கொள்கையை அரசியல்வாதிகளின் மனதில் இருந்து நீக்க வேண்டும்.
அதேபோல் தேசிய அரசாங்கம் குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, இன்றைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் தீர்வு அல்ல. தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதென்றால் ரணில் விக்கிரமசிங்கதான் பொருத்தமானவராக இருப்பார். அவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக உள்ளவர்கள்.
ராஜபக் ஷவும், ரணில் விக்கிரமசிங்கவும் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் தான் அதற்கு சரியானவர்கள். எம்மால் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஆட்சியை உருவாக்கவும் மாற்றவும் நாம் கஷ்டப்படுவோம். ஆனால் அவர்கள் டீல் செய்துகொள்வார்கள். இவர்கள் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைப்பதால் மாற்றம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை, நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காணவும் முடியாது.
இந்த அரசாங்கத்தின் பயணத்தில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம் என்பது தானே தேசிய அரசாங்கத்தின் அர்த்தம். அது சாத்தியமற்ற விடயமாகும். ராஜபக்ஷ அரசாங்கத்தை முழுமையாக நிராகரித்து நாட்டிற்கு ஏற்ற அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM