வீதியை கடந்த கோழி கைது

Published By: Raam

17 Oct, 2016 | 10:44 AM
image

பிரித்தானியாவில் வாகனப் போக்குவரத்து நிறைந்த வீதியை கடக்க முயன்ற குற்றத்திற்காக கோழி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஸ்காட்லாந்தின் டண்டீ  பகுதியில் உள்ள ஈஸ்ட் மார்கெட் வீதியை கடக்க முற்பட்ட குற்றதிற்காகவே குறித்த கோழி கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த கோழியால் வாகன சாரதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சாரதி ஒருவர் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் கோழியை கைது செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, உரிமையாளர் கிடைக்கும் வரை கோழியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

குறித்த கோழி ஏதற்காக வீதியை கடக்க முற்பட்டது மற்றும் உரிமையாளர் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்