அதிசொகுசு வாகன அணிவகுப்பால் குழப்பம் ; அமைச்சர் நாமலுக்கு தொடர்பில்லை என மறுப்பு

By T. Saranya

19 Mar, 2022 | 08:30 AM
image

அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவோ அல்லது அவரது சகோதரர்களோ ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளரும், வடக்கு, கிழக்குக்கான விசேட மீள்குடியேற்ற ஒருங்கிணைப்பாளருமான கீதநாத் காசிலிங்கம் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளினையும், எரிவாயுவினையும் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்தநிலையில் ஒரு தரப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து  கல்பிட்டி வரை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களின் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். 

இந்த வாகன அணிவகுப்பு புத்தளம் - தலுவ சந்தியை அடைந்த நிலையில் அங்கு எரிப்பொருளுக்காக காத்திருந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.  

கல்பிட்டி – மீகட்டுவத்த சுமித தேரர் உள்ளிட்ட பிரதேசவாசிகளும் இணைந்து குறித்த சொகுசு வாகன அணிவகுப்பை தடுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

மேலும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களிள் அணிவகுப்பில் பங்கேற்றிருந்ததாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. 

இதனை தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை செய்திருக்கும்  கீதநாத் காசிலிங்கம் இது தனியார் வாகன அணிவகுப்பு எனவும், சிலர் போலியான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right