போலியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் கைது

18 Mar, 2022 | 07:11 PM
image

(எம்.மனோசித்ரா)

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்க செல்ல முற்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 64 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

இவர் நேற்று  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு  தலா 5 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு , குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14
news-image

இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

2022-09-28 15:47:06