தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும் - கெமுனு விஜயரத்ன

18 Mar, 2022 | 08:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)


எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும்.

எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் போக்குவரத்து சேவை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும் தற்போது, 20 சதவீதமான அளவு பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் பேருந்து சேவையினையும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

சிசெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது இருப்பினும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கல் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள்  விநியோகிக்கப்படவில்லை.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை தனியார் பேருந்து சேவைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16