ஆண்ட்ரியாவின் 'கா' பட முன்னோட்டம் வெளியீடு

18 Mar, 2022 | 04:34 PM
image

நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கா' படத்தின்  முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கா'. 

இதில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் மூத்த நடிகர் சலீம் கௌஸ், கமலேஷ், அஷிதா, நவீன், மூணார் சுப்ரமணியன், அர்ஜுன் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அறிவழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சுந்தர் சி. பாபு இசை அமைத்திருக்கிறார். 

Andrea Jeremiah new Crime Thriller "KA" Movie Launch | YOYO TV Tamil -  YouTube

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

முன்னோட்டத்தில் நடிகர் சலீம் கௌஸ் வனத்துறை மூத்த அதிகாரியாகவும், நடிகை ஆண்ட்ரியா வனவிலங்குகளை படம் எடுக்கும் புகைப்பட கலைஞராகவும் நடித்திருக்கிறார்கள். 

Joy-filled pictures' of Andrea Jeremiah | Times of India

அடர்ந்த வனப்பகுதியில் கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் ' கா ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right