கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வீட்ல விசேஷம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
'மூக்குத்தி அம்மன்' படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி - என் ஜே சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'வீட்ல விசேஷம்'.
இந்த படத்தில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மறைந்த மூத்த நடிகை கே ஏ பி சி லலிதா, ஊர்வசி, சத்யராஜ், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்.
பொலிவுட் தயாரிப்பாளர்கள் போனி கபூர் மற்றும் ராகுல் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் 'வீட்ல விசேஷம்' படத்தில், தமிழுக்காக சில மாற்றங்களை செய்து, திரைக்கதை வசனத்தை ஆர். ஜே. பாலாஜி எழுதியிருக்கிறார்.
இந்தப் படம் ஜூன் மாதம் 17ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'எல். கே. ஜி', 'மூக்குத்தி அம்மன்' என அடுத்தடுத்து இரண்டு படங்களை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லதொரு படைப்பாக வழங்கி, வெற்றி பெற்ற நடிகர் ஆர். ஜே. பாலாஜி, 'வீட்ல விசேஷம்' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இந்தப் படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை பெற்றுத்தரும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM