மட்டக்களப்பில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 

18 Mar, 2022 | 03:34 PM
image

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் உள்ள பிரதேசங்களில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட திட்டம் நேற்று வியாழக்கிழமை 17 ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிறிநாத் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் வழிகாட்டலில் இந்த வீடு வீடாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் விசேட செயற்திட்டம் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின்  கீழ் உள்ள பிரதேசங்களில் முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகுணன் கலந்து கொண்டு இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொது சுகாதார உத்தியோகத்தர்கள் குழுக்களாக கிராம சேவகர் பிரிவுகளாக பிரிந்து வீடு வீடாக சென்று  தடுப்பு ஊசி ஏற்றும் பணியை ஆரம்பித்தனர். 

குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 50 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி ஏற்றாமல் உள்ள அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசியை ஏற்ற இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  வைத்தியர் எஸ். சிறிநாத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57
news-image

அடையாள அணிவகுப்பைக் கோரிய பொலிசார் ;...

2022-09-29 21:56:10
news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15