பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

ஹக்மன, மஹியங்கனை, வெல்லவாய, நவகமுவ, கொட்டாவ மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் முறைப்பாடு செய்ததையடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.