விஷ்ணு விஷாலின் 'மோகன்தாஸ்' பட டீசர் வெளியீடு

18 Mar, 2022 | 11:15 AM
image

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மோகன்தாஸ்' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. 

இதனை 'கைதி' பட புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

'களவு' படத்தை இயக்கிய இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மோகன் தாஸ்'. 

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார், இவர்களுடன் இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன், பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

Aishwarya Rajesh in Jai's film with Gopi Nainar | Tamil Movie News - Times  of India

விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

'எஃப் ஐ ஆர்' படத்தைத் தொடர்ந்து 'மோகன்தாஸ்' படத்தையும் பிரம்மாண்டமான பொருட்செலவில் நடிகர் விஷ்ணு விஷாலின் சொந்த பட நிறுவனமான வி. வி ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது. 

Did you know, Vishnu Vishal has dropped 9 films after 'Ratsasan's success?  | Tamil Movie News - Times of India

காந்தியின் பொன்மொழியை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த டீசரில் விஷ்ணு விஷாலின் குரலில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. 

அந்தக்கதை சுவராசியமாக இருப்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சார்லி குணச்சித்திர வேடத்தில் கலக்கும் 'அரிமாபட்டி...

2024-02-29 19:08:58
news-image

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் நடிகர்...

2024-02-29 19:05:59
news-image

ஊர்வசி நடிக்கும் 'ஜே. பேபி' படத்தின்...

2024-02-29 19:02:14
news-image

விஜய் சேதுபதி வெளியிட்ட 'அக்காலி' பட...

2024-02-29 18:57:41
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-02-29 18:54:27
news-image

சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கும்...

2024-02-27 15:11:49
news-image

கல்லூரி இளைஞர்களுக்கான கதை 'போர்'

2024-02-27 14:10:05
news-image

மல்யுத்த வீரராக நிஹார் நடிக்கும் 'ரெக்கார்ட்...

2024-02-26 16:57:52
news-image

நேச்சுரல் ஸ்டார்' நானி' நடிக்கும் 'சூர்யா'ஸ்...

2024-02-26 14:45:53
news-image

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'இடி...

2024-02-26 13:44:48
news-image

வித்தைக்காரன் - விமர்சனம்

2024-02-24 18:35:42
news-image

இயக்குநர் மிஷ்கின் வெளியிட்ட 'டபுள் டக்கர்'...

2024-02-24 18:32:29