இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Digital Desk 3

18 Mar, 2022 | 06:58 AM
image

இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

Image

அயலகத்திற்கு  முன்னுரிமை எனும் கொள்கைக்கமைய இந்தியாவிடமிருந்து இலங்கை  ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான கோதுமை மா,சீனி மற்றும் அரிசி உட்பட மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடமிருந்து குறுகிய கால கடனுதவி திட்டத்தின் கீழ் இரண்டாம் தடவையாக 1 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 750 டொலர்களாக நிர்ணயிக்குமாறு இலங்கையின் பிரதிநிதிகள் இதன்போது இந்திய அரசாங்கத்தி;ன் பிரமுகர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஒப்பந்தம் கைச்சாத்திடலில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,இந்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ,நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல,இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட,இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த பெப்ரவரி மாதம் முதல்வார காலப்பகுதியில் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. அதற்கான ஒப்பந்தம் கொழும்பில் உள்ள நிதியமைச்சின் காரியாலயத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரது பங்குப்பற்றலுடன் கைச்சாத்திடப்பட்டது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்காக நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த செவ்வாய்கிழமை இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இந்திய நாடாளுமன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தியா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தியா இலங்கையுடன் இணக்கமாக செயற்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு உறுதியளித்தார்.

இந்திய பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர தன்மை,இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதன பசளை திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் உட்பட இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்றைய தினம் அந்நாட்டின் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங்கை புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால உறவினை நினைவுகூர்ந்த அமைச்சர் ஸ்ரீ ராம்குமார் சிங் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அன்புடன் வரவேற்றார்.இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் குறித்து இரு தரப்பினரும்  இதன்போது கலந்துரையாடினர்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலை தொடர்ந்து இந்தியாவிடமிருந்து கடனாக பெறும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.எரிபொருள் இ அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் முறைமையை இலகுப்படுத்தல் வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன்வரி நீடிப்பை கருத்திற்கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவைத்திட்டம் எரிபொருள் இறக்குமதி செய்யும் எரிசக்தி பாதுகாப்பு திட்டம் இதிருகோணமலை  எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல்

நடைமுறையில் உள்ள நிலுவை தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவதற்கு நாணய பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றம்தொழில்வாய்ப்பை விரிவுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான தூண்கள் என கருதப்படுகிறது.

எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. தற்போதைய விஜயத்தை தொடர்ந்து இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58