நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் பெற்றோல் 130 ரூபாவாகவும் டீசல் 126 ரூபாவாகவும் இருந்திருக்கும் - சம்பிக்க

By T. Saranya

17 Mar, 2022 | 08:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்களை காத்துக்கொண்டிருக்கச்செய்து  பாரியளவில் வரி அரவிட்டு வருகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்றைய உலக சந்தையின் எரிபொருள் விலைக்கு அமைய ஒரு லீட்டர் பெட்ராேல் 130 ரூபாவாகவும் டீசல் 126 ரூபாவாகவும் இருந்திருக்கும்  என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் எமது நாட்டில் தொடர்ந்து அதிகரித்து செல்வது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் இன்றைய தினம் எரிபொருட்களின் விலை பெட்ராேல் 130ரூபாவகவும் டீசல் 126 ரூபாவாகவுமே இருந்திருக்கும். 

ஏனெனில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்திருக்கின்றது. தற்போது மசகு எண்ணெய் 98டொலராகும். நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஒரு டொலர் 180 ரூபாவுக்கு இருந்திருந்தால். 

தற்போது டீசல் ஒரு லீட்டரின் விலை 126 ரூபாவாக இருந்திருக்கும். பெட்ராேல் ஒரு லீட்டர் 130 ரூபாவாக இருந்திருக்கும்.

அப்படியானால் இன்று பெட்ராேல், டீசல் பற்றாக்குறைக்கு மேலதிகமாக எந்தளவு தொகை எரிபொருளுக்காக அரசாங்கம் மக்களிடம் இருந்து வரி மூலம் அரவிடுகின்றது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள முடியும். 

மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் இருக்கும் நிலையில் அரசாங்கம் மக்களிடம் இருந்து பிட்பொக்கெட் அடித்துவருகின்றது.

வருமானம் மிகவும் குறைவடைந்துள்ள நிலையில் பெட்ராேல், டீசல் மூலம் 120 ரூபாவுக்கும் அதிகம் வரிக்கு மேலதிகமாக லாபம் ஈட்டிக்கொள்கின்றது.

அதேபோன்று அரசாங்கத்தின் பிழையான நிதி முகாமைத்துவம் காரணமாக, அதற்காக மக்கள் நட்டஈடு செலுத்தவேண்டி இருக்கின்றது.

அத்துடன் தற்போது எரிபொருள் அல்லது மசகு எண்ணெய் கொண்டுவருவதுபோல் இலங்கைக்கு தொடர்ந்து செய்யமுடியாது. 

ஏனெனில் கையடக்க தாெலைபேசிக்கு மீள் நிரப்புவதுபோல் எரிபொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்து இதனை செய்ய முடியாது.

அதற்காக நிலையான வேலைத்திட்டம் ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அதனை செய்ய இந்த அரசாங்கத்துக்கு முடியாமல்போயிருக்கின்றது.

அதனால் காஸ், பெட்ராேல், டீசல் வரிசையில் கஷ்டப்படும் மக்கள் தற்போது முன்னுக்குவந்து, தங்களின் வாழும் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37
news-image

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பேராயர் உட்பட...

2023-02-01 16:26:18
news-image

நிலாவரையில் தவிசாளருக்கு எதிரான தொல்லியல் திணைக்கள...

2023-02-01 15:44:52
news-image

13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும்...

2023-02-01 15:19:01
news-image

இன்ஸ்டாகிராமில் அதிகம் பகிரப்பட்ட நாடுகளின் பட்டியலில்...

2023-02-01 15:18:18
news-image

சிலாபம் பிரதேச சபையின் செயலாளர் ஸ்ரீயானியின்...

2023-02-01 15:07:23
news-image

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுக்களின் போது அமெரிக்கா...

2023-02-01 15:06:02
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் - ஐநா...

2023-02-01 14:52:27
news-image

பஸ் , ரயில் பயணிகளுக்கு டிக்கெட்டுகளுக்குப்...

2023-02-01 14:18:24