இலங்கையில் நடைபெற்ற ஆசிய றக்பி செவன்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி ஹொங் கொங் அணி 2016ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் பெண்களுக்கான போட்டியில் ஜப்பான் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் விசேட அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் ஆசிய றக்பி சங்கத் தலைவர் மற்றும் அனுசரணை வழங்கும் டயலொக் நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஹான்ஸ்விஜேசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவந்த ஆசிய றக்பி செவன்ஸ் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் நேற்று அரையிறுதிப் போட்டிகள் ஆரம்பமாயின. இதில் தரவரிசையில் முதலிடத்திலுள்ள ஹொங்கொங்கும் இரண்டாமிடத்தில் உள்ள இலங்கை அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் ஆடிவர முதல் பாதி ஆட்டம் 7-–7 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு சிறப்பாக ஆடிய ஹொங்கொங் அணி போட்டியை தம் பக்கம் திருப்பிக்கொண்டது. இறுதியில் இலங்கை அணி 7–19 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்கொரியா மற்றும் சீன அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 19-–14 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்கொரியா வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டியில் தென்கொரியா – ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 24–-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணி வெற்றிபெற்று 2016ஆம் ஆண்டுக்கான ஆசிய றக்பி செவன்ஸ் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
பெண்கள் பிரிவில் சீனாவை 17–-5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி ஜப்பான் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM