(எம்.மனோசித்ரா)
சீதுவ பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு அவரது வீட்டிலுள்ள சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீதுவ பொலிஸ் பிரிவில் முகலன்கமுவ பிரதேசத்திலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்ட பெண் 73 வயதுடைய , முகலன்கமுவ - முனிதாச குமாரதுங்க வீதியைச் சேர்ந்தவராவார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதே போன்று மாலம்பே பொலிஸ் பிரிவில் கலாஹேண பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் குறித்த வீட்டிலிருந்த பெண்ணை கட்டி வைத்து, அவரது கணவனைக் கொண்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 80 வயதுடைய மாலம்பே - தலாஹேண பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மாலம்பே பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM