ஜப்பானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அறிவிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது மீளப் பெறப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிச்டர் அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதே சமயம் டோக்கியோவில் நிலநடுக்கம் காரணமாக கடுமையான மின்தடை ஏற்பட்டது.
கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் மொத்தம் 20 இலட்சம் வீடுகளில் மின்சாரம் தடை பெற்றது. டோக்கியோவில் மட்டும் 7 இலட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கிழக்கு ஜப்பான் பகுதியில் பல்வேறு சிறிய குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஆனாலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அங்கு அணு உலைகள் எதுவும் இந்த நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்படவில்லை.
புகுஷிமாவில் பாதிக்கப்பட்ட அணு உலையில் மட்டும் நிலநடுக்கத்தை தொடர்ந்து அபாய ஒலி ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அங்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
இன்னொரு பக்கம் ஜெபம்பனில் ஷான்கேசன் என்று பகுதியில் புல்லட் ரயில் தடம் புரண்டது. புல்லட் ரயில் நகர்ந்து கொண்டு இருக்கும் போதே திடீரென அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் புல்லட் ரயில் 100 பயணிகளோடு தடம் புரண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM