(என்.வீ.ஏ.)
நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் 12ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பங்குபற்றும் நடப்பு சம்பியன் இங்கிலாந்து தனது முதலாவது வெற்றியை இன்று புதன்கிழமை (16) ஈட்டிக்கொண்டது.
தனது முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிய இங்கிலாந்து, மவுன்ட் மௌங்கானுய் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து செல்வதாக இருந்தால் எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம். அதேவேளை அணிகள் நிலையில் முன்னிலையில் உள்ள மற்றைய அணிகளின் முடிவுகள் இங்கிலாந்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்
பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து, சார்ளி டீனின் துல்லியமான பந்துவீச்சு, அணித் தலைவி ஹீதர் நைட்டின் அபார அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, 36.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஸ்ம்ரித்தி மந்தானா (35), ரிச்டா கோஷ் (33) ஆகிய இருவர் மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பின்வரிசையில் ஜூலான் கோஸ்வாமி 20 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சில் சார்ளி டீன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அனியா ஷ்ரப்சோல் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கு இலகுவானதாக இருந்தபோதிலும் இங்கிலாந்து சிரமத்துக்கு மத்தியிலேயே வெற்றி இலக்கை அடைந்தது.
135 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 31.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முதல் இரண்டு விக்கெட்களை 2 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறிய இங்கிலாந்துக்கு அணித் தலைவி ஹீதர் நைட், நெட் சிவர் ஆகியோர் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 68 ஓட்டங்ககள் கைகொடுத்தது.
நெட் சிவர் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அமி ஜோன்ஸ் (10), சொபியா டன்க்லி (17) ஆகிய இருவரும் முறையே 5ஆம், 6ஆம் விக்கெட்களில் ஹீதர் நைட்டுடன் 33 ஓட்டங்களையும் 26 ஓட்டங்களையும் பகிர்ந்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஹீதர் நைட் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இந்திய பந்துவீச்சில் மேக்னா சிங் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இன்று வரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா தனது 4 போட்டிகளிலும் வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் 1ஆம் இடத்தில் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுடன் தோல்வி அடையாமல் இருக்கும் மற்றைய அணியான தென் ஆபிரிக்கா 3 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கின்றது.
அணிகள் நிலை வருமாறு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM