கொழும்பினை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் மூன்றரை மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை வேளையில் 8 மணியிலிருந்து இரண்டரை மணித்தியாலங்களும் மற்றும் மாலை வேளையில் 6 மணியிலிருந்து ஒரு மணித்தியாலமும் மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பினால் 900 மெகா வாற்று மின் தட்டுபாடு ஏற்பட்டுள்ளமையாலே இந்த மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படுத்தப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.