பாடசாலையில் காதல் விவகாரம் - இரு மாணவர்கள் மீது கத்திக்குத்து ; மாத்தளையில் சம்பவம்

By T Yuwaraj

16 Mar, 2022 | 04:33 PM
image

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர்கள் இருவரின் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில், குறித்த இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் இரண்டு மாணவர்களுக்கும் கழுத்து மற்றும் தலையில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை மாணவி ஒருவருடனான காதல் விவகாரம் காரணமாக இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது, கத்தியால் குத்தப் போவதாக கூறிய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டு மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளாதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right