தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகள் : நியமனங்கள் மாற்றத்திற்கு தொடர்பு கொள்ளவும் 

Published By: MD.Lucias

16 Oct, 2016 | 08:00 PM
image

நியமனம் பெற்ற தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகள் தாம் சார்ந்த மாகாணத்துக்கோ அல்லது மாவட்டத்திற்கோ நியமனங்களை மாற்றிக் கொள்ளும் பொருட்டு மேன்முறையீடு செய்வதற்கமைய அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேவை கருதிய பட்டதாரிகள் நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்பு கொள்ள முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

டிப்ளோமா பட்டதாரிகள் 3225 பேருக்கான நியமனங்கள் கடந்த 4 ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டிருந்தனர். இந்த நியமனம் கிடைக்கப் பெற்றோர் தமது மாகாணத்தை அல்லது மாவடத்தை அல்லாதவர்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

இது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அறிவித்த மேற்படி பட்டதாரிகள் தமது மாகாணங்களுக்கு அல்லது மாவட்டத்திற்கு நியமனங்களை மாற்றித் தருமாறு கோரிக்கையும் விடுத்திருந்தனர். இது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அடிப்படையில் இன்றும் நாளையும் அந்தந்த மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளருடனோ அல்லது அமைச்சின் கல்வியியற் கல்லூரி ஆணையாளரையோ சந்தித்து அல்லது தொடர்பு கொண்டு தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

அத்துடன் 011 2784819 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அடையாள அட்டை இலக்கத்தை வழங்குவதனூடாக அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27